03rd April 2019 23:28:13 Hours
இலங்கை இராணுவத்தின் அதிகாரிகளுக்கான விசேட 4ஆம் கட்ட பயிற்சி நிகழ்வுகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடந்த திங்கட் கிழமை (01) உலக நவீன அபிவிருத்தி தொடர்பாக இடம் பெற்றது.
மேலும் இப் புதிய பாடநெறியானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கிணங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிகாரிகளுக்கிடையில் இடையில் பிரபல்யத்தை ஏற்படுத்திய பயிற்சி நெறியாக இவை காணப்படுகின்றது.
இதன் போது இப் பயிற்சிகளில் கலந்து கொண்ட 44அதிகாரிகளுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தளதபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றதோடு 51ஆவது படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல ரொஷான் செனெவிரத்தின அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதன் போது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக உயர் அதிகாரிகள் மற்றும் பல அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Sports brands | 『アディダス』に分類された記事一覧