04th April 2019 12:12:43 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையம் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் போன்றவற்றின் படைத் தலைமையகங்களைச் சேர்ந்த 1107 அதிகாரிகள் மற்றும் படையினர்களை உள்ளடக்கி நுகர்வுக்கான மீன் வகைக் கொள்முதல் மற்றும் இவை தொடர்பான ஒழுங்குகள் தொடர்பான கருத்தரங்கானது வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பகத்தால் மார்ச் மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கருத்தரங்கானது பகுதி 11 மற்றும் பகுதி 111 போன்ற பிரிவுகளில் பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் மேற்கொள்ளப்பட்டதுடன் இதற்கான விரிவுரைகள் ஹவஸ்ட் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பிரதான விஞ்ஞானியான வைத்தியர் ஜீவிக்க கணேகமராச்சி மற்றும் தேசிய ஓஷன் தேடுதல் மையத்தின் விஞ்ஞானியான திரு மஹேந்திர ஜயதிலக அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இக் கருத்தரங்கில் 304 அதிகாரிகள் மற்றும் 803 படையினர் இவ் மீன் வளர்ப்பு தொடர்பான மற்றும் மீன் வகைகள் தொடர்பான விரிவுரைகளில் கலந்து கொண்டதுடன் அவை தொடர்பான விளக்கங்களையும் பெற்றுக் கொண்டனர். இதற்காக பகுதி 1 இன் கருத்தரங்கானது மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இடம் பெற்றது. latest Running | New Releases Nike