Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd April 2019 20:28:13 Hours

கொமாண்டோ படையினரின் வெளியேற்ற நிகழ்வு

ஊவா குடாஓயாவில் அமைந்துள்ள கொமாண்டோ படைத் தலைமையகத்தில் 99ஆவது பயிற்றுவிப்பு பிரிவில் இரண்டு அதிகாரிகள் உள்ளடங்களாக 99கொமாண்டோப் படையினர் பயிற்றுவிக்கப்பட்டதுடன் இவர்களது வெளியேற்ற நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக் கிழமை (31) இடம் பெற்றது.

இவ் வெளியேற்ற நிகழ்வுகளில் பேண்டு வாத்திய நிகழ்வுகள் தைகொண்டோ பயிற்சிகள் மிக முக்கிய அதிதிகளின் பாதுகாப்பு விதிமுறைகள் நாய்களின் சாகச நிகழ்வுகள் ஸ்னைபர் நிகழ்வுகள் போன்றன காண்பிக்கப்பட்டதுடன் இதன் போது இப் படையினரின் உற்றார் உறவினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கொமாண்டோ படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா மற்றும் கொமாண்டோ படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் கே ஏ சமரசிறி அத்துடன் பல உயர் அதிகாரிகள் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். short url link | Nike Running