Header

Sri Lanka Army

Defender of the Nation

30th March 2019 11:32:00 Hours

வன்னிப் படையினரால் குடும்பத்தாரிற்கு புதிய வீடமைத்து வழங்கப்பட்டுள்ளது

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களுடன் 21ஆவது படைப் பிரிவின் தளபதியான பிரிகேடியர் குமார் ஜயபதிரன மற்றும் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஜெனரல் ஸ்டாப் அதிகாரியான கேர்ணல் அணில் பீரிஸ் போன்றோரின் ஒருங்கிணைப்பில் வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கெகிராவ மெகொடவௌ பிரதேசத்தில் காணப்படும் மொரகொட எனும் பிரதேசத்தில் காணப்படும் பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தாரிற்கு அவர்களது இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு காணப்படும் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தலைமையில் நன்கொடையாளிகளின் பங்களிப்போடு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜயக்கிரஹாயன நிறுவனத்தின் தலைவரான வைத்தியர் அனுல விஜேசுந்தர அவர்களின் நன்கொடையில்; இவ் வறிய குடும்பத்திற்கான வீடு அமைத்து வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்கான மேலதிக நன்கொடையை கொழும்பில் உள்ள ராஜா தங்க நகை மாளிகையின் உரிமையாளரான திரு அதுல எலியபுர அவர்கள் வழங்கினார். இதற்கான ஒருங்கிணைப்பை கேர்ணல் அணில் பீரிஸ் அவர்கள் வழங்கினார். அத்துடன் 212ஆவது படைப் பிரிவின் 7ஆவது (தொண்டர்) இலங்கை படைக்கலச் சிறப்பணியினரால் இவ் வீடானது கட்டமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ் வீட்டிற்கான மின்சாரம் நீர் போன்ற வசதிகளுடன் நவீன மயப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இக் குடும்பத்தாரிற்கு 50 000 ருபா மதிப்பிலான தளபாடங்கள் உள்ளடங்களான வீட்டு உபகரணங்கள் போன்றன கேர்ணல் அணில் பெரேரா மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் தொடர்பாடல் அதிகாரியான கேர்ணல் உபுல் பண்டார போன்றோரின் இணைப்பில் வழங்கப்பட்டதுடன் புதிய சைக்கிலொன்றும் இக் குடும்பத்தின் பாடாசலை செல்லும் சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் பாடசாலைக்கு கால்நடையாக இச் சிறுமி தினமும் செல்வதை கருத்திற்கொண்டு இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இக் குடும்பத்தினருக்காக கட்டமைக்கப்பட்டுள்ள புதிய வீடானது மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தலைமையில் மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளது. latest Nike release | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov