Header

Sri Lanka Army

Defender of the Nation

29th March 2019 13:03:37 Hours

ஆஸ்திரேலிய கூட்டு நடவடிக்கை பிரதி கடற் படை தளபதி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு வருகை

இலங்கை -ஆஸ்திரேலிய கடல்சார் பசுபிக் பிராந்திய -2019 ஒப்பந்தத்தின் கீழ் 1000 கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படையினருடன் ஆஸ்திரேலிய கப்பல் ‘எச் எம் ஏ எஸ் கென்பரா’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததோடு, ஆஸ்திரேலிய கூட்டு நடவடிக்கை கடற் படை பிரதி தளபதி மேஜர் ஜெனரல் ரொக நோப்ல் கடந்த வியாழக்கிழமை மதியம் (28) ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது இராணுவத் தளபதி இந்து சமுத்திரத்தின் கடல்சார் இலங்கை ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஒத்துழைப்பை பேணுவதன் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிட்டதோடு அவர்களின் வருகைக்கான நன்றிகளையும் தெரிவித்தார்.

மேலும், இவ் நட்புறவுச் சந்திப்பின் இறுதியில் லெப்டினன் மகேஷ் சேனாநாயக அவர்கள் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில் ஆஸ்திரேலிய அதிகாரிக்கு ஞாபக சிண்ணத்தினையும் வழங்கி வைத்தார்.

கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தாணிக பாதுகாப்பு இணைப்பாளர் குலு கெப்டன் அன்வின் மற்றும் ஐடி டி முகாம் மேஜர் ஜெனரல் ஆகியோர் இச்சந்திப்பில் சமூகமளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.jordan release date | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes