Header

Sri Lanka Army

Defender of the Nation

28th March 2019 14:55:47 Hours

அமெரிக்க தூதுவரை இராணுவ தளபதி சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் தூதுவர் அலைனா பீ டெப்லட்ஷ் அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் வைத்து இன்றைய தினம் (28) ஆம் திகதி உத்தியோகபூர்வமா சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த அமெரிக்க தூதுவரை இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க அவர்கள் வரவேற்றார்.

இராணுவ தளபதி மற்றும் அமெரிக்க தூதுவரது இந்த சந்திப்பின் இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் தூதுவரது வருகையை கௌரவித்து நினைவுச் சின்னம் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

இச் சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர்லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் ஹெஸ் மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.அத்துடன் அமெரிக்க தூதுவரினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிடப்பட்டது. bridge media | nike air barkley posite 76ers shoes for women Maximum Volume DJ4633-010 Release Date - SBD