19th March 2019 15:17:10 Hours
வருடாந்த துப்பாக்கிச் சூட்டுப் போட்டிகள் மற்றும் அதற்கான விருது வழங்கும் விழாவானது இராணுவ சிறு ஆயுத சங்கத்தினால் தியத்தலாவையில் கடந்த திங்கட் கிழமை (18) இடம் பெற்றது.
இப் போட்டிகளில் தியத்தலாவையில் 33 குழுக்களைக் கொண்ட 302 துப்பாக்கி சூட்டாளர்கள் கலந்து கொண்டதுடன்; 100மீற்றர் தூர இடைவெளியில் 2019ஆம் ஆண்டு மார்ச்11ஆம் திகதி முதல் மார்ச் 18ஆம் திகதி வரை இடம் பெற்றது. இதற்கான ஒழுங்குகள் இராணுவ சிறு ஆயுத சங்கத்தின் தலைவரான பிரிகேடியர் செனரத் நிவுன்ஹல்ல அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது.
இப் போட்டிகளில் வெற்றிக் கிண்ணத்தை கஜபா படையணி பெற்றுக் கொண்டதோடு கெமுனு ஹேவா படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
குழுக்களுக்கிடையிலான போட்டி நிரலில் இலங்கை இராணுவ சேவைப் படையணி வெற்றி பெற்றதோடு இலங்கை இராணுவ பொலிஸ் படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டார். இவ் அதிகாரியவர்களை ; இராணுவ சிறு ஆயுத சங்கத்தின் தலைவரான பிரிகேடியர் செனரத் நிவுன்ஹல்ல அவர்கள் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற துப்பாக்கி சூட்டாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேக மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா உயர் அதிகாரிகள் மற்றும் பல படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.
2019ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு
குழுவிற்கான வெற்றியாளர்கள்
1ஆம் இடம் - கஜபா படையணி
2ஆம் இடம் - இலங்கை மின்சார மற்றும் பொறியியல் படையணி
3ஆம் இடம் - கொமாண்டோ படையணி
சேவைப்பயிற்சி போட்டிகள்
1ஆம் இடம் - இலங்கை இராணுவ சேவைப் படையணி
2ஆம் இடம் - இலங்கை இராணுவ பொலிஸ் படையணி
3ஆம் இடம் - இலங்கை மின்சார மற்றும் பொறியியல் படையணி
திறந்த போட்டிக்கான வெற்றியாளர்கள்
1ஆம் இடம் - கெமுனு ஹேவா படையணி
2ஆம் இடம் - கஜபா படையணி
3ஆம் இடம் - கொமாண்டோ படையணி
உயர் அதிகாரிகளின் சிறந்த துப்பாக்கி சூட்டாளர்
1ஆம் இடம் - பிரிகேடியர் என் டீ எஸ் பி நிவுன்ஹல்ல
2ஆம் இடம் - பிரிகேடியர் ஜி எம் சி கே பீ ஏகநாயக்க
3ஆம் இடம் - பிரிகேடியர் டீ எஸ் டீ வெலிகல
சிறந்த துப்பாக்கி சூட்டிற்கான கள அதிகாரி
1ஆம் இடம் - கெப்டன்ட் ஜெ எச் எஸ் சம்பத் - கெமுனு ஹேவா படையணி
2ஆம் இடம் - லெப்டினன்ட் டீ ஜெ கே எஸ் தெனியகெதர - இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி
3ஆம் இடம் - லெப்டின்னட் டீ எஸ் ஏ சி சில்வா - விஜயபாகு காலாட் படையணி
(தனியார்) போட்டிகள்
1ஆம் இடம் - கோப்ரல் பீ எம் பி வெதருவ - பாதுகாப்பு படையணி
2ஆம் இடம் - சாதாரண படைவீரர் ஏ எம் ஆர் பண்டார - கஜபா படையணி
3ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் கே எம் ஆர் ஏ கே ஜயவர்தன
திறந்த போட்டி நிரல்கள்
1ஆம் இடம் - சார்ஜன்ட் டீ எம் குணரத்தின - கெமுனு ஹேவா படையணி
2ஆம் இடம் - ஆணைச்சீட்டு அதிகாரி11 எம் எம் என் கொஸவத்த - கஜபா படையணி
3ஆம் இடம் - கோப்ரல் எம் ஏ லால் - கெமுனு ஹேவா படையணிlatest Nike Sneakers | FASHION NEWS