Header

Sri Lanka Army

Defender of the Nation

14th March 2019 13:37:33 Hours

யாழ் இராணுவத்தினரின் கணினி மையம் மாணவர்களின் தேவை கருதி திறந்து வைப்பு

யாழ் இராணுவத்தினரால் புதிதாக அமையப்பெற்ற தகவல் தொழில்நுட்ப மையமானது கடந்த திங்கட் கிழமை (11) 6ஆவது இலங்கை சமிக்ஞைப் படையணித் தலைமையகத்தில் இடம் பெற்றதோடு இதன் போது பிரதம அதிதியாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.

அந்த வகையில் இத் தகவல் தொழில்நுட்ப மையமானது சமிக்ஞைப் படையணியின் பிரதான அதிகாரியான மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாராச்சி அவர்களால் படையினரின் தேவை கருதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இராணுவத் தளபதியவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இக் கணினி மையமானது மாணவர்களின் கணினி தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

மத அனுஷ்டானங்களிற்கமைவாக திறக்கப்பட்ட இப் புதிய கட்டிடமானது பிரதம அதிதியவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் முதல் மூன்று மாணவர்கள் தமது தகவல் தொழில் நுட்ப பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் போது இராணுவத் தளபதியவர்கள் இம் மையத்தின் முதல் கட்ட பயிற்சி பிரிவுகளை மேற்கொள்பவர்களுடனான குழுப் புகைப்படத்திற்கு சமூகமளித்தார். அதன் பின்னர் சமிக்ஞைப் படையணி பிரதானியான மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாராச்சி அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதோடு இதன் போது இராணுவத் தளபதியவர்கள் இத் தகவல் தொழில்நுட்ப மையத்தின் முக்கியத்துவம் தொடர்பாக எடுத்துரைத்தார். அதேவேளை சமிக்ஞைப் படையணி பிரதானியவர்கள் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வழிகாட்டி புத்தகம் மற்றும் அவை தொடர்பான காணொளியையும் இராணுவத் தளபதியவர்களின் முன்னிலையில் எடுத்துரைத்து காண்பித்தார். இதன் போதான விரவுரைகளை மேஜர் டீ டீ என் மென்டிஸ் அவர்கள் சமிக்ஞைப் படையணி பிரதான அதிகாரியவர்களை முன்னிலைப்படுத்தி நிகழ்த்தினார்.

இந் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதியவர்கள் 6ஆவது சமிக்ஞைப் படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் சமிக்ஞைப் படையணி பிரதான அதிகாரியான மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாராச்சி மற்றும் 6ஆவது சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் கணிஷ்க ஜயவர்தன போன்றோர் இராணுவத் தளபதியவர்களை வரவேற்றனர்.

இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி முன்னரங்க பாதுகாப்பு அதிகாரியவர்கள் (வடக்கு) 51ஆவது 52ஆவது மற்றும் 55ஆவது படைப் தலைமையகங்களின் தளபதியவர்கள் தகவல் தொழி;ல்நுட்ப பணிப்பாளர் சமிக்ஞைப் படையணித் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பிற்கான பிரிகேடியர் இலங்கை சமிக்ஞைப் படையணியின் உயர் அதிகாரிகள் மற்றும் வடக்கு கடற் படைத் தளபதியவர்கள் பலாலி விமானப் படைத் தளபதியவர்கள் , மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் , யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், அரச உயர் அதிகாரிகள் முப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் , பெற்றோர் போன்றோர் கலந்து கொண்டனர். best Running shoes brand | adidas Campus 80s South Park Towelie - GZ9177