06th March 2019 20:55:43 Hours
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது ஏற்பாட்டில் கிளிநொச்சியிலுள்ள பெண்களுக்கு அழகு கலைத் தொடர்பான செயலமர்வு இம் மாதம் (4) ஆம் திகதி ‘நெலும் பியச’ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த செயலமர்வு ஒரு முழு நாளைக் கொண்டிருந்தது. லயன்ஸ் கழகத்தின் அனுசரனையில் 574 ஆவது படைத் தலைமையகத்தின் பூர ஒத்துழைப்புடன் பெண்களுக்கானஅழகுக் கலை, கூந்தல் அலங்கரிப்பு தொடர்பான விடயங்கள் செயலமர்வில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த வீராங்கனைகள் மற்றும் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த கூடுதலான பெண்கள் செயலமர்வில் கலந்து கொண்டனர்.Running Sneakers Store | Air Jordan