Header

Sri Lanka Army

Defender of the Nation

11th March 2019 08:42:14 Hours

233 ஆவது படைத் தலைமையகத்தின் ஆண்டு நிறைவு விழா

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 233 ஆவது படைத் தலைமையகத்தின் 28 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வாகரையில் உள்ள படைத் தலைமையகத்தில் இரத்த தானங்கள் வழங்கப்பட்டன.

233 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேர்ணல் ஆர் எல்விடிகல அவர்களது தலைமையில் பொலன்னறுவை பொது வைத்தியசாலை ஊழியர்களது பங்களிப்புடன் இந்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் இந்த வருடாந்த நிறைவை முன்னிட்டு பெப்ரவாரி மாதம் 27 ஆம் திகதி மார்ச் 3 ஆம் திகதி வரை அனைத்து சமய ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன. (28) ஆம் திகதி கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது பங்களிப்புடன் பௌத்த இரவு பிரித் தான நிகழ்வுகள் இடம்பெற்றது.

வாகரை பிள்ளையார் கோயிலிலும், புனித மைக்கல் தேவாலயத்திலும், முகைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் , படையினர் இணைந்திருந்தனர்.Sportswear free shipping | Men’s shoes