08th March 2019 11:24:20 Hours
'ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு' எனும் திட்டத்தின் கீழ் இராணுவத்தினருக்கு சமையல் திறமையை ஊக்குவிக்கும் நோக்குடன் சுகாதாரத் தரத்திற்கு பொருந்தக்கூடிய உணவு வகைகளை தயாரிப்பதற்காக சமையல் நிபுணர்கள், சமையல்காரர்களால் கடந்த (27) ஆம் திகதி புதன் கிழமை கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சிறப்பான சமையல் முறை நிகழ்வுகள் இடம் பெற்றன.இந்த நிகழ்வில் 89 அதிகாரிகளும் படையினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நடைமுறை நிகழ்வானது இராணுவ பிரதி பதவி நிலை பிரதாணியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண அவர்களின் வழிகாட்டுதலின் கீழு; ஏற்பாடு செய்யப்பட்டதுடன் கெப்தன் டி.ஏ.கே.பி திலகரத்ன அவர்களால் (ஆரோக்கியமான உணவு தேர்வு மற்றும் தயாரித்தல்) எனும் தலைப்பிலும் லெப்டினன்ட் ஏ.சி.கே.பி உடகம மற்றும் செல்வி குமுதுனி சத்ரசிங்க அவர்களால் (தரமான உணவுகளின் அம்சங்களை தக்கவைத்தல்) தொடர்பாகவும் லெப்டினன்ட் எச்.டி.ஜே.எல் தேசபிரிய (மனநிலை வைத்தியர்) மற்றும் திரு தர்மசிரி (சமையல்) போன்றோர்களால் விரிவுரை மற்றும் சமையல் செயற்பாடு நடைவடிக்கைகளும் வழங்கப்பட்டது.
இத்திட்டமானதுஅனைத்து படையினர்களின் சுகாதார அடிப்படை தேவையின் முக்கிய காரணிகளின் நிமித்தம் இராணுவ படையினர்களுக்கு இந்த பயிற்ச்சிகள் வழங்கப்பட்டன. spy offers | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov