Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2019 16:38:42 Hours

பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய தூதுவர்கள் யாழ் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய நாட்டு மற்றும் வடக்கு அயர்லாந்தின் உயர ஆனைக்குழுவின் எச்.இ ஜேம்ஸ் டயூரிஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரான எச்.இ அலினா பி. டெபிட்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சு திரு சஷோ ரிபிலோஸ்கி உட்பட துனை அதிகாரிகளும் யாழ் குடா நாட்டிற்கு (06) ஆம் திகதி புதன் கிழமை விஜயத்தை மேற் கொண்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை பலாலியில் வைத்து சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் யாழ் குடா நாட்டில் பாதுகாப்புப் படையினரின் இன்றைய பங்கு மற்றும் பணிகள் மற்றும் சமாதானத்துக்கான கவனம், நல்லிணக்கம் இனவழி ஒற்றுமை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக இராணுவத்தினரின் உறுதியான திட்டங்களைப் பற்றி விரிவாக கலந்துரையாடின.

மேலும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு உள்ளிட்ட தனியார் நிலங்கள் விடுவிப்பு மற்றும் அவற்றுக்கான அக்கறை போன்ற விடயங்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடின. மேலும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி அவர்களை பாராட்டி விடைபெறும் முன்னர் பார்வையாளர்களின் புத்தகத்திலுள்ள அவர்களின் பாராட்டுக்களை கையொப்பம்மிட்டன.

இந் நிகழ்வில் யாழ் பாதுகப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டன. Best Nike Sneakers | Trending