Header

Sri Lanka Army

Defender of the Nation

08th March 2019 20:20:20 Hours

இராணுவ சேவா வனிதா பிரிவினர் இராணுவ மகளிர் படையினருடன் இணைந்து சர்வதேச மகளிர் தினம் நிகழ்வு

இராணுவ சேவா வனிதா தலைமையகத்தினர் மார்ச் (08) ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பனகொடையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு அடுக்கு மாடி கட்டடிமான ‘விரு கெகுழு’பாலர் பாடசாலையை திறந்து வைக்கும் நிகழ்வானது பானகொடை வளாகத்தில் வைத்து (08) ஆம் திகதி காலை இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியான திருமதி சந்திரிக்கா சேனநாயக அவர்களுடன் இராணுவ சேவா வனிதாவின் துனை தலைவி திருமதி சுஜீவ நெல்சன் அவர்களும் கலந்துகொண்டதுடன், பாலர் பாடசாலை குழந்தைகளால் வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து பொத்த மத பிரித் பூஜையும் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ரிபன் வெட்டி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. அதற்கமைய சம்பிரதாய முறைப்படி பால் பானை பொங்கும் நிகழ்வும் இடம் பெற்றன.

அதனைத் தொடர்ந்து பிரதான அதிதி அவர்களால் கட்டிட வளாகத்தில் மரக் கன்று நடப்பட்டதுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் நிமித்தம் குழு புகைப்படத்திலும் கலந்து கொண்டார்;.

அதனைத் தொடர்ந்து பிரதான அதிதி மற்றும் சேவா வனித்தா பிரிவினர் உட்பட இராணுவ மகளிர் படையினரும் அழகு கலாச்சாரம் பற்றிய நன்கு அறியப்பட்ட ஆலோசகராக திருமதி அமாதிஸாநாயக்க அவர்களின் சிறப்பு பயிற்ச்சி மற்றும் இசை நிகழ்வும் சிறப்பு விரிவுரைகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வானது இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வின் முடிவில் திருமதி சேனநாயக்க அவர்களால் 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களின் துணைவியர்களுக்கு தையல் இயந்திரங்களை நன்கொடையளித்தார்.

இந்ததிட்டமானது ட்ரீம்ரன் கம்பெனி லிமிடெட் அவர்களால் இடம் பெற்றதுடன் நிகழ்வில் சேவா வனிதா பங்கேற்பாளர்களும் 100 க்கும் அதிகமான இராணுவ மகளிர் பெண் வீராங்கனைகளும் பங்கேற்றனர். best Running shoes | Asics Onitsuka Tiger