06th March 2019 20:51:43 Hours
கிளிநொச்சியில் குறைந்த வருமானத்தைப் பெறும் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் 57ஆவது படைத் தலைமையகமானது 574ஆவது படைப் பிரிவு மற்றும் 3ஆவது கஜபா படைப் பிரிவுகளுடன் ஒன்றினைந்து 'அந்தூரிய மலர்களுக்கான பயிர்ச்செய்கையை மேற்கொள்ளல் தொடர்பான கருத்தரங்கை கடந்த ஞாயிற்றுக் கிழமை (03) கிளிநொச்சி நெலும் பியஸ மண்டபத்தில் 400பொது மக்கள் மற்றும் 100 படையினரின் பங்களிப்புடன் நிகழ்தியுள்ளது.
அந்த வகையில் அந்தூரியம் மலரானது அலங்கார வேலைப்பாடுகள் திருமண வைபவங்கள் மரண சடங்குகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுவதுடன் சிறந்த வருமானத்தை ஈட்டக்கூடிய ஓர் சிறந்த வழியையும் அமைகின்றது. இம் மலரானது குறிப்பிட்ட இதற்குறிய பூக்கும் காலத்திலேயே பூக்கின்ற மலராக காணப்படுகின்றது.
மேலும் இவ் அந்தூரிய திட்டத்திற்னை மேற்கொள்வதற்காக 57ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஐடிஎன் தொலைக்காட்சி லேக்ஹவுஸ் தருணி பத்திரிகை யுனிபவர் நிறுவனம் மற்றும் மரினா நிறுவம் போன்றன ஒன்றினைந்து தங்களது நன்கொடைகளை வழங்கி வைத்துள்ளது.
இந் நிகழ்வில் அந்தூரிய பயிர்ச்செய்கையில் தலைவியான திருமதி.யமிக்க குணவர்தன ஐடின் தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான திரு சுணில் பிரேமரத்தின கிளிநொச்சி மத்திய வங்கியின் திரு. கார்திக் நிரோஷன எஸ்டீபீ வங்கியின் திரு.எட்வின் சுரேஷ் கோல்டி விளம்பர நிறுவனத்தின் திரு மாலக நுவன் தருணி பத்திரிகையின் ஆசிரியரான திருமதி. மனோலி சுபசிங்க ஏடிவி கிரியேஷனின் திருமதி. நிரோஷன் பிரேமரத்தின மற்றும் கிளிநெச்சி பிரதேசத்தை சேர்ந்த 400 பொது மக்கள் மற்றும் 100 படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.
மேலும் இப் பயிற்சி பட்டறையில் அந்தூரிய பயிர்செய்கை மற்றும் இதற்கான புதிய முறை பயிரிடல் வகைகள் குறைந்;த வட்டியில் வங்கி கடன் சேவை அத்துடன் எஸ்டீபி வங்கியினால் வழங்கப்படுகின்ற கடன் முறைகள் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இடம் பெற்றது. buy shoes | Nike