06th March 2019 13:46:09 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் 12 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் பெப்ரவாரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 2 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இந்த நிகழ்வுகள் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய ஆசிர்வாத நிகழ்வுகள் முதலில் புனித தெரேசா கிறிஸ்த்தவ தேவாலயத்தில் பெப்ரவாரி மாதம் (15) ஆம் திகதியும், கந்தசாமி கோயிலில் பெப்ரவாரி மாதம் (20) ஆம் திகதியும், யூம்மா பள்ளியில் பெப்ரவாரி மாதம் (22) ஆம் திகதியும், பௌத்த பிரித் தான நிகழ்வுகள் மார்ச் மாதம் (1) ஆம் திகதி இடம்பெற்றது.
மேலும் மார்ச் முதலாம் திகதி 12 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிக்கு 3 ஆவது கஜபா படையணியினால் இராணுவ கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் படைத் தலைமையக கட்டளை தளபதிகள், படையணியின் கட்டளை அதிகாரிகள் போன்றோர் ணைந்திருந்தனர்.
மேலும் அன்றைய தினம் படைத் தளபதி மற்றும் படைப் பிரிவில் உள்ள அனைவரது பங்களிப்புடன் பகல் விருந்தோம்பல் நிகழ்வு இடம்பெற்றது. Buy Sneakers | Nike for Men