Header

Sri Lanka Army

Defender of the Nation

06th March 2019 23:16:54 Hours

சீனா தூதுவர் மற்றும் ஆளுனர் யாழ் பாதுகாப்பு தலைமையகத்திற்கு விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான சீனா தூதரகத்தின் தூதுவர் மதிப்புக்குரிய ஹீ செங் சியூவென் மற்றும் வட sமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட புதிய ஆளுனரான சுரேன் ராகவன் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

அங்கு சென்றவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

சீன தூதுவர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இம் மாதம் (5) ஆம் திகதி தனது விஜயத்தை மேற்கொண்டார். இதன் போது குடாநாட்டின் தற்போதைய இராணுவப் பணிகளைப் பற்றியும், அனைத்து சிவில் சமூகம் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தியதன் மூலம் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டையும் கொண்டுள்ளது.

அத்துடன் வடமாகாண ஆளுனரான் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்களும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை இம்மாதம் (4) ஆம் திகதி சந்தித்தார். இச் சந்திப்பின் போது யாழ் குடா நாட்டின் பொது மக்கள் மற்றும் இராணுவத்தினரிடையே உறவு முறையை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்பாகவும், அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த ஆளுனர் மற்றும் சீன தூதுவர் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டனர். Nike footwear | New Releases Nike