04th March 2019 00:44:03 Hours
தேசிய மகளீர் தினத்தை முன்னிட்டு 'பெண்களின் உரிமைகள் மற்றும் வன்முறை தொடர்பான செயலமர்வு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இம் மாதம் (2) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.
இந்த செயலமர்வுகள் இலங்கை மகளீர் சட்டவாக்க சங்கத்தின் தலைவி திருமதி சரோஜினி இளங்கோவன் மற்றும் இலங்கை மகளீர் சட்டவாக்க சங்கத்தின் அதிகாரி திருமதி சுவர்னா ஜயவீர அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.
இவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வேண்டுகோளுக்கமைய இங்கு வருகை தந்து செயலமர்வுகளை நடாத்தினர்.
செயலமர்வில் யாழ் குடா நாட்டைச் சேர்ந்த 100 பெண்களும், 7 ஆவது இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த அங்கத்தவர்கள் உள்ளடக்கி முழுமையாக 300 பேர் இணைந்திருந்தனர்.
மேலும் இந்த செயலமர்வில் முன்னாள் யாழ் மாவட்ட நீதிவான், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயரதிகாரியான பிரிகேடியர் பிரியந்த கமகே மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர். bridgemedia | nike air barkley posite 76ers shoes for women Maximum Volume DJ4633-010 Release Date - SBD