Header

Sri Lanka Army

Defender of the Nation

05th March 2019 13:29:07 Hours

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு படையினரால் 19.72 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

(ஊடக அறிக்கை)

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பராமரிப்பின் கீழிருந்த மயிலடி வடக்கு மற்றும் பலாலி கிழக்கு பகுதிகளில் உள்ள 19.72 ஏக்கர் காணிகள் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு (4) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது.

மயிலடி பிரதேசத்தில் (0.25) ஏக்கர் நிலப்பரப்புக்கள் அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் யாழ் மாவட்ட செயலாளர் திரு என். வேதநாயகம் அவர்களுக்கு இந்த காணிப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த காணி விடுவிப்புக்கள் ஜனாதிபதி செயலணியின் பணிப்புரைக்கமைய இராணுவ தளபதியின் தலைமையில் 2 – 3 வருடங்களுக்கு முன்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. (முடிவு) Sports News | Archives des Sneakers