04th March 2019 00:22:03 Hours
2019ஆம் ஆண்டிற்கான படையணிகளுக்கிடையிலான கிரிகெற் போட்டிகள் மன்னார் பிரதேசத்தில் உள்ள 54ஆவது படைத் தலைமையகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இடம் பெற்றது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 21 54 56 61 மற்றும் 62ஆவது படைப் பிரிவுகளின் பங்களிப்போடு முன்னரங்க பாதுகாப்பு வலய அதிகாரி(வட மத்திய) மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இப் போட்டி நிகழ்வானது கடந்த மாதம் பெப்ரவரி 26 முதல் 28ஆம் திகதிகளில் இடம் பெற்றது.
மேலும் இந் நிகழ்வுகள் கிரிகெற் திறமையை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் இடம் பெற்றது.
இதன் போது 21ஆவது படையணி வெற்றி பெற்றதோடு வன்னி பாதுகாப்பு படைத் தலைமயகம் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.
அந்த வகையில் 21ஆவது படைப் பிரிவின் சாதாரண படைவீரரான ராஜபக்ச அவர்கள் வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொண்டதோடு சிறந்த போட்டியாளராக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் லான்ஸ் கோப்ரல் விஜேகோண் அவர்கள் சிறந்த போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டார் .
மேலும் இவ்வாறான கிரிக்கெற் போட்டிகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் இடம் பெற்றதோடு இந் நிகழ்வில் பல அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் 54ஆவது படைத் தளபதியான பிரிகேடியர் செனரத் பண்டார அவர்களின் தலைமையில் இப் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வட மத்திய மாகான முன்னரங்கு பாதுகாப்பு வலய அதிகாரியான பிரிகேடியர் ரசிக்க கருணாதிலக அவர்கள் இதன் போது வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இதன் போது 54ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஜெனரல் ஸ்டாப் அதிகாரியவர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றோர் 2019ஆம் ஆண்டிற்கான கிரிக்கெற் போட்டிகளில் கலந்து கொண்டனர். jordan Sneakers | Women's Designer Sneakers - Luxury Shopping