25th February 2019 16:41:21 Hours
சிறுநீரக நோய் நிவாரணத்திற்காக ஜனாதிபதி பணிக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவத்தின் உதவியுடனான வைத்தியர் திலக் அபேசேகர சிறுநீரக நோய் சிகிச்சை மற்றும் நலன் பேணல் நிலைய திறப்பு விழாவானது 25 ஆம் திகதியன்று அதிமேகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இவ்வேலைத்திட்டமானது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின் வழிகாட்டளின் கீழ் 17 வது பிரிவின் 200 திற்கு அதிகமான இராணுவ பொறியியலாளர் மற்றும் தொழிநுட்பவியலாளர்களின்; உதவியூடனும் மற்றும் கடற்படையின் உதவியூடனும் 01.10.2016 திகதி ஆரம்பிக்கப்பட்;டது.
மேலும்,வைத்தியர் திலக் அபேசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும் இத்திட்டத்தின் கட்டிடமானது ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டதோடு புத்த துறவிகள், அமைச்சர்கள், மதகுருக்கள், செயலாளர்கள், முதலமைச்சர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரதாணி, முப்படைத் தளபதிகள், பொதுமக்கள் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளா;களும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்திற்கான செலவு மதிப்பீடானது ரூபா.628 மில்லியனாகும். அத்தோடு 17 வது சி இ எஸ் கட்டளைத் தளபதி லெப்டினன் கேனல் ஜே கே எஸ் ரங்கிக கட்டளையின் கீழ் லெப்டினன் கேனல் என் எம் ஜே பெரேரா, கெப்டன் எல் அதநாயக்க, லெப்டினன் சுரவீர மற்றும் ஏனைய படைவீரர்களும் இவ்வேலைத்திட்டத்தை முடிப்பதற்காக இரவு பகலாக வேலை செய்தனர்.
மேலும் இந்நிகழ்வில் உறையாற்றிய கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்.சமன் ரத்நாயக அவர்கள் படையினரின் தியாகம் அர்பணிப்பு மற்றும் அவர்களின் ஒழுக்கம் பற்றி பேசியதோடு கடற்படையினரின் கடமையுணர்வுகளைப் பற்றியும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கு வைத்தியர் ரத்நாயக கருத்து தெரிவிக்கையில் இராணுவத் தளபதி அவர்களின் ஆசிர்வாதம் இல்லாமல் இருந்திருந்தால் இத்திட்டமானது குறித்த தினத்திற்குள் புரணப்படுத்த முடியாமலிருந்திருக்கும்.மேலும் ஒவ்வொரு மாலை வேலை நான் பார்வையிட செல்லும்போது இராணுவத்தினர் தமது முலுமையான பங்களிப்பினை செய்து கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டார்.
அதனைத் தொடந்து ஜனாதிபதி உறையாற்றுகையில், இத்திட்டத்தின் வெற்றிக்கான முப்படைகளின் தியாகத்தை குறிப்பிட்டதோடு டொக். அபேசேகரவினால் அநுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சி கே டி திட்டத்தின் முயற்சி பற்றியும் குறிப்பிட்டார். மேலும் 670 நீர் சுத்திகரிப்பு அலகுகள் கடற்படையினரால் வழங்கப்பட்டதன் பின்னர் கடந்த இரண்டு வருட அறிக்கையின் பிரகாரம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் வீதம் குறைவடைந்துள்ளதையும் தெரிவித்தார். மேலும் ஜனாதிபதியினால் முப்படை அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு விஷேட ஞாபக சின்னங்களும் வழங்கப்பட்டன.
அதன் பின்னர் முப்படை தளபதிகளினால் நீர் சுத்திகரிப்பு அலகுகள் சி.டி.எஸ் மற்றும்; இரத்த அழுத்த அலவீட்டு கருவி மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்கள் போன்றன மாவட்டத்திலுள்ள தேவையான பகுதிகளுக்கு வழங்கப்பட்டன.Buy Sneakers | Men’s shoes