Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2019 15:41:21 Hours

முப்படைகளின் தளபதி சேனபுர கஜபா படையணிக்கு விஜயம்

அதிமேகு ஜனாதிபதி மைத்திரி சிரிபால அவர்கள் சேனபுரவில் உள்ள கஜபா படைத் தலைமையகத்துக்கு கடந்த திங்கழன்று (25) ஆம் திகதி தனது விஜயத்தினை மேற்கொண்டதோடு அங்குள்ள நிரந்தரமாக அங்கவீனமுற்ற படைவீரர்களின் நலன்களை கேட்டறிந்து கொண்டார்.

அதனைத் தொடந்து முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியவர்கள் கஜபா படைப்பிரிவின் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சவேன்ர சில்வா அவர்களினால் இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

ஜனாதிபதி அங்குள்ள அங்கவீகமுற்ற படைவீரர்களை பாரவையிட்டு அவர்களின் தேக ஆரோக்கிய நிலைமைகளையும் மற்றும் அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்

மேலும் ஜனாதிபதி அவர்களினால் கடந்த 23 ஆம் திகதியன்று அங்கவீகமுற்ற படைவீரர்களின் நலன் பேணும் முகமாக மிகவும் அத்தியாவசியமான புதிய நீளமான சிகிச்;சை நீச்சல் தடாகமானது திறந்து வைக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து ஜனாதிபதியின் சேனபுர விஜயத்தின் ஞாபக சின்னமாக மரக் கன்றானது நீர்ச் சிகிச்சை முறைக்காக அமைக்கப்பட்ட புதிய நீச்சல் தடாகத்தின் அருகே ஜனாதிபதியினால் நடப்பட்டதோடு, அங்கவீகமுற்ற படைவீரர்களுக்கு சில பொதிகளும் வழங்கப்பட்டன.

கஜபா படை வீரர்களுக்காக கஜபா படையணியின் சேவா வணிதா பிரிவின் தலைவியான திருமதி. சுஜீவ நெல்சன் அவர்களின் வேண்டுகோளிற்கமைய, யங் லங்கா நிறுவனத்தின் தலைவியான திருமதி. செஹானி பியசேன அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இந் நீச்சல் தடாகமானது 25 மீற்றர் நீளத்தையூம் 18 மீற்றர் அகலத்தையூம் மற்றும் 8 பிரிவூகளையூம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஜனாதிபதியவர்களுடன் புகைப்படம் எடுக்கப்பட்டு, 14 கஜபா படைப் பிரிவிரைச் சேர்ந்த கோப்ரல் பீ.எம்.ஆர்.எஸ்.பரனமன்னவினால் முப்படைகளின் தளபதி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் கஜபா படைப் பிரிவின் மன்ற உறுப்பினர்கள், கஜபா படைப் பிரிவின் மத்திய தளபதி பிரிகேடியர் ஹேரன்ட பீரிஸ், கஜபா படைப் பிரிவின் பிரதி மத்திய தளபதி, ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள், படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், மற்றும் ஏனைய படை வீரர்களும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Adidas shoes | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat