Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2019 18:41:21 Hours

11 ஆவது படைப் பிரிவில் புதிய அதிகாரிகள் தங்குமிட விடுதி திறந்து வைப்பு

கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள 11 ஆவது படைப் பிரிவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட அதிகாரிகள் தங்குமிட விடுதி (25) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் இந்த படைப் பிரிவு பொறியியலாளர் சேவைப் படையணியினால் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் த சில்வா மற்றும் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி திஸ்ஸ நாணயக்கார அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி அவர்கள் இந்த விடுதியை திறந்து வைப்பதற்காக வருகை தந்தார்.

முதலில் மங்கள விளக்குகள் ஏற்றி இராணுவ தளபதி மற்றும் இராணுவ உயரதிகாரிகளின் பங்களிப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. அத்துடன் கண்டி பிரதேசத்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற் கொண்ட கடற்படைத் தளபதி வயிஷ் அத்மிரால் பியல் த சில்வா அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் கடற்படைத் தளபதி அவர்கள் பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்திலும் தனது கையொப்பத்தை கையொப்பமிட்டார்.

மேலும் இந்த நிகழ்வில் இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன, மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Sneakers Store | Nike Off-White