23rd February 2019 19:21:01 Hours
முன்னாள் இராணுவ பதவி நிலை பிரதானியான ஓய்வு பெற்றுச் சென்ற மேஜர் ஜெனரல் சி.ஏ.எம்.என் சில்வா அவர்களின் இறுதி மரணச் சடங்குகள் இராணுவ கௌரவ அணிவகுப்பு மரியாதையுடன் இம் மாதம் (23) ஆம் திகதி மாலை பொறளை பொது மயானத்தில் இடம்பெற்றது.
இந்த இறுதி மரணச் சடங்கில் இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, சேர் ஜோன் கொதலாவல பல்கலைக்கழகத்தின் குலவேந்தன் எயார் வைஷ் மார்ஷல் சாகர கொடகதெனிய , 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எல்.எஸ்.கே பெரேரா, இராணுவ ஆளனி நிருவாகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தேவிந்திர பெரேரா மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவரது இறுதிச் சடங்கில் இராணுவ தளபதியினால் வழங்கப்பட்ட பகுதி 1 உரையுடனும், அத்துடன் 21 வெடி முழக்கத்துடன் இராணுவ கௌரவ மரியாதையுடன் இவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.
இராணுவ தளபதியினால் வழங்கப் பட்ட பகுதி 1 மரணச் செய்திகள் கீழ்வருமாறு
Sports brands | Nike Shoes