Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2019 09:40:14 Hours

பதவிநிலைப் பிரதானியவர்கள் தமது பாடசாலையின் சக மாணவர்களால் வரவேற்கப்பட்டார்

மாத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள புனித தொமஸ் கல்லூரியின் பழைய மாணவர்களால் இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை (22) வரவேற்கப்பட்டார்.

இதன் போது இக் கல்லூரியின் அதிபரான திரு வஜித்த திஸாநாயக்க அவர்களால் இவ் அதிகாரியவர்கள் வரவேற்கப்பட்டதோடு பௌத்த மத வழிபாடுகளும் தேரர்களால் நிகழ்த்தப்பட்டது. மேலும் நாட்டிற்காக சேவையை வழங்கிய இவ் அதிகாரியவர்களுக்கு மாத்தளைப் பிரதேசத்தின் சிறந்த புத்த சாசன அமைச்சின் தேரர்களாளும் ஆசிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் இப் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலை தலைமை மாணவர்களின் பங்களிப்போடு பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இப் பாடசாலை மாணவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்து நன்றியுரையை நிகழ்த்தினார்.

இதன் போது திட்டமிடல் பணிப்பாளரான பிரிகேடியர் துமிந்த கமமே மற்றும் பழைய மாணவர்கள் இராணுவ அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Running sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ