Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2019 16:42:27 Hours

22 ஆவது படைப் பிரிவினரின் பங்களிப்புடன் கோவில் திருவிழா

திருகோணமலை; ஓர்ஸ்கில் அமைந்துள்ள திருக்கை அம்பாள் இந்து ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைப் பெறும் ஆலய திருவிழவை முன்னிட்டு 22ஆவது படைப் பிரிவினர்களின் நல்லெண்ணத்தை மேம்படுத்திகொள்ளும் நிமித்தம் படையினரால் பல வேலைதிட்டங்களை மேற் கொண்டனர்.

அந்த வகையில் 22 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்கவின் அவர்களின் வழிக்காட்டலின் கீழ் கடந்த (19) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கோவில்; வளாகத்தில் சிரமதான பணிகளை மேற்கொண்டன.

அத்துடன் இறுதி பூஜை தினத்தன்று திருவிழாவில் 350 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டன.

அதனைத் தொடர்ந்து கோவிலின் பிரதான குருக்களான ஸ்ரீரசி ஸ்ரீகாந்த அவர்கள் மற்றும் பக்தர்களால் இராணுவத்தினர் வழங்கிய உதவிக்கு பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இறுதி பூஜை நிகழ்வில் 22ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி, 22ஆவது படைப் பிரிவின் சிவில் விவகார அதிகாரி மற்றும் 22ஆவது படைப் பிரிவின் படையினர் உட்பட பக்தர்களும் பங்கேற்றனர்.trace affiliate link | Air Max