Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2019 17:17:56 Hours

கிளிநொச்சி இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் வேண்டுக்கோளுக்கமைய கிளிநொச்சி பிரதேசத்தின் திரு காந்தன் அவர்கள் வழங்கிய நிதியுதவியுடன் கிளிநொச்சி பிரதேச தட்டுவன்கோட்டை மற்றும் முரசுமோட்டை போன்ற பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 66 பொதுமக்களுக்கு உலர் உணவு பொருட்களான நூடுல்ஸ், பால் மா, சர்க்கரை, தேயிலை, பருப்பு, சோயா மீட் மற்றும் அரிசி போன்றன வழங்கப்பட்டன.

இந்த நிவாரண வழங்கும் நிகழ்வானது 573 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 1ஆவது சிங்க படையணி மற்றும் 15 ஆவது சிங்க படையணியின் படையினரால் கடந்த (18) ஆம் திகதி திங்கட்கிழமை இடம் பெற்றன.

மேலும், அக்கரைபற்று வர்த்தக வங்கியால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படுக்கை விரிப்புகள், தலையணைகள் மற்றும் தலையணை உறைகள் போன்றன இரு இடங்களிலும் வழங்கப்பட்டன. Nike Sneakers Store | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov