Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2019 17:50:50 Hours

யாழ் முன் பள்ளிக்கு இராணுவத்தினரால் புதிய தளபாடங்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள கொடைகாமம் கலைவானி சமூக நிலையம், திருமல்வார் சமூக நிலையம் மற்றும் யாழ் குடாநாட்டில் உள்ள லிகோரியா மீனவர் சங்கத்தினர் ஆகியோர்களால் துர்காமலை முன் பள்ளிக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் இராணுவத்தினருக்கும் சிவில் மக்களுக்கும் இடையில் நல்ல சமூக உறவுகள் புரிதல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நிமித்தம் சமூக நலன் உதவிகளாக முன் பள்ளிக்கு நன்கொடைகளாக புதிய தளபாடங்கள் வழங்கின.

இந்த நன் கொடை வழங்கும் நிகழ்வானது கடந்த (21) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை துர்காமலை முன் பள்ளிக்கு வளாகத்தில் இடம் பெற்றதுடன் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களால் 50 மேசைகளும், கலைவானி சமூக நிலையத்தினரால் 75 பிளாஸ்டிக் நாற்காலிகள்; 3 மேசையும், திருமல்வார் சமூக நிலையத்தினரால் 25 பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் லிகோரியா மீனவர் சங்கத்தினரால் 50 பிளாஸ்டிக் நாற்காலிகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் 52 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச வாசிகளும் நன்கொடையாளர்களும் கலந்து கொண்டன. bridge media | Gifts for Runners