Header

Sri Lanka Army

Defender of the Nation

21st February 2019 15:50:18 Hours

யக்கல இராணுவ சீருடைத் தொழிற்சாலை (ரணவிரு அபரல்) புதிய படைத் தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

யக்கலவில் அமைந்துள்ள இராணுவ சீருடைத் தொழிற்சாலை (ரணவிரு அபரல்); 4ஆவது புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்கள் நியமிக்கப்பட்டதுடுன் தமது கடமைப் பொறுப்பை இப் படைத் தலைமையகத்தில் ஏற்றார்.

அந்த வகையில் ரணவிரு அப்பரல் படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு இப் படைத் தளபதியவர்கள் வரவேற்கப்பட்டதுடன் மத வழிபாட்டு ஆசீர்வாத நிகழ்வுகளும் இதன் போது இடம் பெற்றது.

இதன் பிற்பாடு இப் புதிய படைத் தளபதியவர்களால் நெல்லிக் கன்றும் இப் படைத் தலைமையகத்தில் நடப்பட்டது. அத்துடன் தேநீர் விருந்துபசார நிகழ்வும் இடம் பெற்றதோடு மேலும் இப் புதிய அதிகாரியவர்கள் நலன்புதித் திட்டங்கள் மற்றும் இராணுவ சீருடைத் தொழிற்சாலை (ரணவிரு அபரல்) பார்வையிட்டார்.

மேலும் இப் புதிய படைத் தளபதியான மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்கள் இப் படைத் தலைமயகத்தின் முன்னய அதிகாரியான கடமையாற்றிய பிரிகேடியர் சேனக திஸாநாயக்க அவர்களின் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் பல பிரதி தளபதிகள் யக்கல மற்றும் அலவ்வ தொழிற்சாலைகளின் நிர்வாகிகள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். Running sports | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta