Header

Sri Lanka Army

Defender of the Nation

19th February 2019 09:17:51 Hours

யாழ் படையினர்களுக்கு ஆங்கில பயிற்சி நெறிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினருக்கு மூன்று மாத கால ஆங்கில பயிற்சி நெறிகள் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி தொடக்கம் 2019 ஆம் ஆண்டு பெப்ரவாரி மாதம் 18 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இந்த பயிற்சி நெறிகள் இலங்கை பொது சேவைப் படையணியைச் சேர்ந்த ஆங்கில விரிவுரையாளரான லெப்டினன்ட் அநுர ரூபசிங்க அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பயிற்சி நெறியை இராணுவத்திலுள்ள வெவ்வேறுபட்ட படையணியைச் சேர்ந்த 36 இராணுவ படை வீரர்கள் மேற்கொண்டனர்.

இந்த பயிற்சி நிறைவு விழா இம்மாதம் (18) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் வருகை தந்து பயிற்சி நிறைவு செய்த படையினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே, படைத் தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். latest Running | jordan Release Dates