Header

Sri Lanka Army

Defender of the Nation

18th February 2019 18:20:13 Hours

யாழ் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

நடேஷ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அனுசரனையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரியில் நன்கொடையாக இம் மாதம் (15) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து மங்கள விளக்கேற்றுகளை ஏற்றி வைத்தார்.

பின்பு படைத் தளபதியுடன் பாடசாலை அதிபர் திரு ஜி விமலன் மற்றும் கனடா பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள் இணைந்து துவிச்சக்கர வண்டிகளை இந்த மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர். Buy Sneakers | jordan Release Dates