Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2019 22:06:58 Hours

வன்னி படையினரால் வவுனியா தரம் 5 இல் சாதனைபடைத்த மாணிவிக்கு பரிசாக புது வீடு

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் முன் முயற்ச்சியால் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்டத்தில் தரம் 5 இல் உயர்ந்த மதிப்பெண்களை பெற்று சாதானை படைத்த மாணவிக்கு புதிய வீடொன்றை விரைவில் அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் நடைப் பெற்ற தரம் 5 கான புலமைப் பரீட்சையில் மிக அதிகமான பெறுபேர்களை பெற்ற வவுனியா நெலும் குளம் பிரதேசத்தின் கழைமகள் வித்யாலயத்தின் கணேசபுரம் பிரதேசத்தில் வசிக்கும் ஆர்.நிவர்ஷனா என்ற மாணவியாவர். இம் மாணவி தனது ஏழை பெற்றோருடன் பாழடைந்த வீட்டில் வாழ்ந்து வந்தார் அதனைத் கருத்திற் கொண்ட வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் சரிபார்கப்பட்டதன் பின்னர் திரு. சந்தன அலககோன் அவர்களால் இத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து வன்னி பாதுகாப்பு படைத் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி 21 ஆவது படைப் பரிவின் ஜெனரல் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் குமார ஜயபத்திரன அவர்களின் தலைமையில் நிவர்ஷன மாணவியின் குடும்பத்தாருடன் அடிகல் நாட்டும் நிகழ்வு கடந்த (17) ஆம் திகதி வியாழக்கிழமை இடம் பெற்றன.

அதே சமயம் தரம் 5 புலமைப் பரீட்சையில் இரண்டாவது இடத்தை பெற்ற சிவபுரம் வித்யாலயத்தின் ஹரிதிக் ஹன்சுஜா மாணவியின் படிப்புகளை தொடர்வதற்கு புலமைப் பரிசுகளும் வழங்கப்பட்டது. 61ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஜயம்பதி திலகரத்ன அவர்களால் இரண்டு நிதியூதவியாளர்களான அசோக்வீரசிங்க மற்றும் டாக்டர் நந்தனி வீரசிங்க ஆகியோர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் வன்pனிபாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் ஆலோசனைக்கமைய வன்னி பாதுகாப்பு படையினரால் ஒரு சில மாதங்களுக்குள் வீட்டை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. spy offers | Sneakers Nike