Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2019 12:36:24 Hours

கிழக்கு படையினருக்கு ‘சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான இடையூறுகள் தொடர்பான விரிவுரை

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிப்புரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கும் ‘சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான இடையூறுகள் தொடர்பான விரிவுரை கடந்த (28) ஆம் திகதி திங்கட் கிழமை வெலிக்கந்த கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றன.

இவ் விரிவுரையானது கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் பணிப்புரைக்கமைய மேற் கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வில் கதுருவெல தம்மபால தேரர், பொலனறுவை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் திருமதி எல்.டி.சன்ஜீவனி மற்றும் 2 ஆவது பொலிஸ் படையணியின் கட்டளை தளபதி லெப்டினென்ட் கேர்னல் இ.எம்.ஐ ஏக்கநாயக்க உட்பட படையினர்களும் கலந்து கொண்டனர்.

இவ் விரிவுரையில் மதம், சமூகம், அறநெறி, நெறிமுறைகள், சட்ட அமலாக்கம், பாலியல் குற்றங்கள், பெற்றோர் பாதுகாப்பு போன்றவை தொடர்பான விபரங்கள் தொடர்பாக விரிவுரைக்கப்ட்டன. Nike shoes | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov