Header

Sri Lanka Army

Defender of the Nation

24th January 2019 16:00:00 Hours

இராணுவ உயரதிகாரிகள் இருவர் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்வு

படைத்துறைகளின் முனைஞரும் பிரதானியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் (24) ஆம் திகதி வியாழக் கிழமை மாலை இலங்கை இராணுவத்தில் உள்ள உயரதிகாரிகளான பிரிகேடியர் தரத்திலுள்ள இரு அதிகாரிகள் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியும் , சிங்கப் படையணியைச் சேர்ந்த அதிகாரியான பிரிகேடியர் கே.ஏ.டப்ள்யூ குமாரப்பெரும அவர்களும், 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியும் , சிங்கப் படையணியைச் சேர்ந்த அதிகாரியான பிரிகேடியர் ஜி.டப்ள்யூ.டீ.கே ஜயதிலக போன்ற அதிகாரிகள் மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த இரு அதிகாரிகளும் இறுதியாக இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளாவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sports | Air Jordan