Header

Sri Lanka Army

Defender of the Nation

25th January 2019 12:23:09 Hours

இராணுவ ரக்பி வீரர்களின் எதிர் காலத்திற்கு சிறப்பான ஊக்குவிப்பு

இலங்கை இராணுவத்தின் ரக்பி லீக் வீரர்கள் ரக்பி போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் மிகுந்த வல்லமைமிக்கவர்களாவர் அதற்கமைய அண்மையில் நடைப்பெற்ற ரக்பி போட்டியில் வெற்றிப்பெற்றதற்கமைய பனாகொட இராணுவ தலைமையகத்தில் புதிய ரக்பி மைதானம் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் அண்மையில் இராணுவ ரக்பி வீரர்களின் சமீபத்திய வெற்றிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதற்கமை இந்த பயிற்சிகள் படை முகாம்களுக்கு சொந்தமாக இருப்பதற்கான நிமித்தம் மேற்கு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியும் இலங்கை இராணுவ ரக்பி கழகத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந் நிகழ்வானது கடந்த (23) ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டதுடன் மேற்கு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியும் இலங்கை இராணுவ ரக்பி கழகத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளால் புதிய ரக்பி மைதானம் நிர்மாணிப்பதற்கான அடித்தளம் ஆரம்பிக்கப்ட்டது.

இந்த திட்டம் இராணுவ தளபதியவர்களின் அறிவுறுத்தலிற்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களுடன் இராணுவ பொறியாளர்களுடனும் இணைந்து ஒரு குறுகிய காலத்தில் புதிய ரக்பி விளையாட்டு மைதானத்தின் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. latest Nike release | Autres