Header

Sri Lanka Army

Defender of the Nation

16th January 2019 09:00:02 Hours

கிரிவானகம மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இடம் பெற்ற தலைமைத்துவப் பயிற்சிகள்

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கிணங்க இராணுவப் படையினரால் ஹல்தும்முல்ல பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிரிவானகம மத்திய கல்லூரியின் மாணவர்களுக்கு ஜனவரி 11முதல் 13வரையான திகதிகளில் தலைமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப் பயிற்சிகளுக்கான ஒழுங்குகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.

இப் பயிற்சிகளை 14இராணுவ பயிற்றுனர்கள் இதில் கலந்து கொண்ட 61 மாணவர்களுக்கு வழங்கினர். இதன் போது இவர்களுக்கு தலைமைத்துவம் குழச் செயற்பாடு மற்றும் ஆக்கத்திறன்களை மேம்படுத்தல் பேன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இடம் பெற்றது. Sports News | Nike Shoes, Clothing & Accessories