Header

Sri Lanka Army

Defender of the Nation

14th January 2019 22:00:21 Hours

நாடுபூராக உள்ள பாடசாலைகளில் போதை பொருள் தடுப்பு பணிகளுக்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு

ஜனாதிபதி போதை பொருள் தடுப்பு பிரவினால் நாடு பூராக மேற்கொள்ளப்படும் போதை ஒழிப்பு பணிகளில் தற்போது நாடு பூராக உள்ள 6312 பாடசாலைகளில் இந்த பணிகளை இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அது தொடர்பாக கலந்துரையாடலை நடாத்துவதற்கு ஜனாதிபதி போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சமந்த குமார கித்தலவாராச்சி, கல்வி அமைச்சின் பிரதி கல்வி பணிப்பாளர் திரு சுதர்ஷன பீரிஸ் மற்றும் மேஜர் ஜயம்பதி பொன்வீர போன்ற அதிகாரிகள் நேற்று (14) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையக தளபதியின் பணிமனையில் சந்தித்தனர்.

நாடு பூராகவுள்ள அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், படைப் பிரிவுகள், படைத் தலைமையகங்களில் சேவை செய்யும் இராணுவத்தினரால் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலைகளில் போதை பொருள் ஒழிப்பு திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு விளம்பர பத்திரங்கள் விநியோகிக்கப்படும். அத்துடன் பாடசாலைகளில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விரிவுரைகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இராணுவ தளபதியின் தலைமையில் இராணுவ உளவியல் பணியகம், நடவடிக்கை பணியகம் மற்றும் இராணுவ ஊடக பணியக உயரதிகாரிகளுடன் கடந்த தினங்களில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் இராணுவ தளபதி இந்த பணிகளுக்கு பாடசாலைகளில் உள்ள மாணவ தலைவர்கள், கெடட் மாணவர்கள், சாரணர்கள் , வகுப்பு தலைவர்கள் மற்றும் கண்காணிப்பு குழுவினர்களது பங்களிப்புடன் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த பணிகளில் இராணுவ மகளீர் அதிகாரிகள், சிரேஷ்ட ஆணை பெறாத அதிகாரிகள், மகளீர் படையாளிகளை ஈடுபடுத்தி படசாலைகளில் இந்த அறிவிப்பு விளம்பர பத்திரிகைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் இராணுவ தளபதி வலியுறுத்தினார்.

இது தொடர்பாகக இராணுவ தளபதி இராணுவ திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எம்.எம் கித்சிறி, பொது நிர்வாக அலுவலகத்தின் கேர்ணல் தினேஷ் உடுகம மற்றும் ஊடக பணியகத்தின் கேர்ணல் பிரியந்த காரியவஷம் போன்ற அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.Sports brands | Women's Nike Superrep