Header

Sri Lanka Army

Defender of the Nation

14th January 2019 12:20:00 Hours

முல்லைத்தீவில் ‘செனகி சியபத’ கருத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் டயலொக் நிறுவனத்தின் அனுசரனையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்திருந்த சுகந்திபுரம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் இரட்டமடு தமிழ் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த 400 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு சுகந்திபுரம் தமிழ் வித்தியாலய வளாகத்தினுள் இடம்பெற்றது. இந்த பணிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ.எஸ் ஆரியசிங்க அவர்கள் வருகை தந்தார். அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் செல்வி ரூபாவதி கேதிஸ்வரன் அம்மையார் அவர்களும் வருகை தந்தார்.

மேலும் இந்த நிகழ்வில் டயலொக் நிறுவனத்தின் அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.Sports News | Nike Shoes