Header

Sri Lanka Army

Defender of the Nation

14th January 2019 12:07:51 Hours

வறிய குடும்பத்தினருக்கு இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் வீடு நிர்மானித்து கையளிப்பு

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாணிக்கபுரம், விசுவமடு பிரதேசத்தில் வசித்து வந்த வறிய குடும்ப நபருக்கு இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் வீடு நிர்மானிக்கப்பட்டு உரிமையாளருக்கு இம் மாதம் (10) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.

ஹொரன தலகால ஶ்ரீ சித்தார்த்த அமைப்பின் தலைவர் மத குருவான தலாகல சுமனரத்ன நாயக்க தேரர் அவர்களின் நிதி அனுசரனையில் இந்த வீடு நிர்மானிக்கப்பட்டன.

572 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 6 ஆவது சிங்கப் படையணியின் தலைமையில் இந்த வீட்டு நிர்மான கட்டிட பணிகள் இடம்பெற்றன.

மேலும் வெள்ளப் அனர்த்தத்தின் போது பாதிப்படைந்த கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள நெத்தலியாறு முன்பள்ளி மாணவர்கள் மற்றும் கன்னைநகர் வித்தியாலய மாணவர்கள் 197 பேருக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மஹாமேவுன தியான மத்திய நிலையத்தின் தலைவர் கிரிபத்ஹொட ஞானானந்த தேரர் அவர்களின் தலைமையில் ‘ஸ்ரத்த தொலைக்காட்சி நிறுவனத்தின் அனுசரனையில் இந்த பாடசாலை உபகரணங்கள் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது எண்ணக் கருவிற்கமைய 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 6 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் நாலக கருணாரத்ன அவர்களது தலைமையில் இந்த வீட்டு கட்டிட நிரமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.latest jordan Sneakers | Archives des Sneakers