Header

Sri Lanka Army

Defender of the Nation

14th January 2019 11:57:52 Hours

22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கற்கைநெறி பயிற்சிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 45 வேலை நாட்கள் படையினருக்கு ஆங்கில பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப் பயிற்சிகள் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 29 ஆம் திகதி வரை ஆங்கில பயிற்சி நெறி இடம்பெற்றது. இதில் 26 இராணுவத்தினர் பங்கேற்றி கொண்டு பலனை பெற்றனர். இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் 22 வது படைப் பிரிவின் பதவி நிலை அதிகாரி – 1 லெப்டினன்ட் கேர்ணல் எம்.எச்.ஆர் பெர்ணாண்டோ அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து பயிற்சி நிறைவு செய்த படையினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

தமிழ் மொழி பயிற்சிகளை வேலை நாட்கள் 30 தினங்களில் மேற்கொண்டு இந்த பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவத்தினருக்கு இம்மாதம் (7) ஆம் திகதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 22 ஆவது படைப் பிரிவின் பதவி நிலை கேர்ணலான கே.எம்.பி.எஸ்.பீ குலதுங்க அவர்கள் வருகை தந்து பயிற்சி நிறைவு செய்த இராணுவத்தினருக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.Asics footwear | Nike, adidas, Converse & More