12th January 2019 16:44:09 Hours
இம்மாதம் (12) ஆம் திகதி நிட்டவெல மைதானத்தில் இலங்கை இராணுவ ரக்பி கழகம் மற்றும் கென்டி எஸ்சி ரக்பி கழகத்திற்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை இராணுவ ரக்பி கழகம் திறமையாக விளையாடி வெற்றியை சுவீககரித்துக் கொண்டது.
இப்போட்டிகளில் இலங்கை இராணுவ ரக்பி அணி (23) புள்ளிகளையும், கென்டி ரக்பி கழகம் (22) புள்ளிகளையும் பெற்றுக் கொண்டது.
டயலொக் நிறுவனத்தின் அனுசரனையில் இப்போட்டிகள் இடம்பெற்றது.
பதிவுகளின்படி, 2016 ஆம் ஆண்டு தொடக்கம் கண்டி ரக்பி கழகம் தொடர்ச்சியாக வெற்றியை சுவீகரித்து கொண்டு வந்தது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். அந்த பதிவுகளை இராணுவ ரக்பி கழகம் இம்முறை முறியடித்து வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
இராணுவ ரக்பி கழகத்தில் இருந்து பிரபாத் குமார, நாலக மதுரங்க, கயான் சலிந்த மற்றும் மெதஹெதர போன்ற விளையாட்டு வீரர்கள் மிகவும திறமையாக இம்முறையில் இடம்பெற்ற போட்டியில் விளையாடினார்கள்.Sports brands | Trending