10th January 2019 12:05:38 Hours
கிளநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படையணிகளான 1 ஆவது இலங்கை சிங்கப் படையணி, 15 ஆவது (தொ) சிங்கப் படையணி மற்றும் 14 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினர் இணைந்து கிளிநொச்சி பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (7) ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்த நன்கொடைகள் ‘தெரன’ ஊடக நிறுவனம் மற்றும் டீ.எஸ்.ஐ கம்பனியின் அனுசரனையில் முருகானந்த வித்தியாலயம், கோரன்கட்டு புனித அந்தனி கல்லூரி, தடுவன்கொடி கன்னகி அம்மன் கல்லூரி, தம்பிராசா கல்லூரி, முருசுமோட்டை அரச தமிழ் கலவன் பாடசாலை, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, பெரியகுளம் முன்பள்ளி பாடசாலை மற்றும் மாயனூர் முன்பள்ளியில் இப்பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 1063 பாடசாலை மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு கிளிநொச்சி பாதுகாப்புப படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
மேலும் ஆனையிறவு நாகேந்திரா வித்தியாலயம் மற்றும் பரந்தன் இந்து கலவன் பாடசாலையைச் சேர்ந்த 145 மாணவர்களுக்கு ஐக்கிய நாட்டில் பொறியியலாளராகவும் அக்கரைபத்தை சொந்த இடமாக கொண்டிருக்கும் திரு கந்தன் அவர்களது அனுசரனையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் பாடசாலை உபகரணங்கள் இம்மாதம் (8) ஆம் திகதி நன்கொடையாக வழங்கப்பட்டன.
அத்துடன் பௌத்த ஒளி சர்வதேச அமைப்பின் அனுசரனையுடன் 5 லட்சம் பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் 894 மாணவர்களுக்கு கிளிநொச்சி முன்பள்ளி மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இம்மாதம் (9) ஆம் திகதி வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பௌத்த ஒளி சர்வதேச அமைப்பின் தலைவர் கௌரவத்திற்குரிய யட்டலாவத்த குசலானந்த தேரர், தாய்லாந்தைச் சேர்ந்த மதகுரு பூகு குவன் சான, களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு ரத்னசிரி ரத்னாயக போன்றோர் இணைந்திருந்தனர்.Asics footwear | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5