08th January 2019 15:40:10 Hours
முல்லைத்தீவு கோம்பாவில் பிரதேசத்தில் அமைந்துள்ள 68 ஆவது படைத் தலைமையகத்தில் படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்ததன் நிமித்தம் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் ஏ.எஸ் ஆரியசிங்க அவர்கள் (7) ஆம் திகதி பதவியேற்றார்.
புதிதாக பதவியேற்று படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் படையினர் வரவேற்றனர்.
பின்னர் படைத் தளபதியின் பங்களிப்புடன் அனைத்து படை வீர ர்களது பங்கேற்புடன் தேநீர் விருந்தோம்பல் நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வின் போது 681, 682, 683 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
பிரிகேடியர் ஆரியசிங்க சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் சூரியவெவ தெற்கு பல்கலைக்கழகத்தில் ரெக்டராகவும் பதவி வகித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.best Running shoes | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival