Header

Sri Lanka Army

Defender of the Nation

06th January 2019 22:58:31 Hours

58 ஆவது படைப் பிரிவின் ஆண்டு நிறைவு விழா

காலி பூசாவில் அமைந்துள்ள 58 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழா (3) ஆம் திகதி வியாழக் கிழமை இராணுவ சம்பிரதாய முறைப்படி படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன.

58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்கள் இந்த நிகழ்விற்கு வருகை தந்தார். இவரை இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் படைத் தளபதியின் பங்களிப்புடன் தலைமையகத்தில் பகல் விருந்தோம்பல் நிகழ்வும் இடம்பெற்றது.

வெள்ளிக் கிழமை (4) ஆம் திகதி படைத் தலைமையக வளாகத்தினுள் இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன. அத்துடன் இந்த ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சீனிகம தேவாலயத்தில் ஆசிர்வாத பூஜைகளும் இடம்பெற்றன. Sneakers Store | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp