Header

Sri Lanka Army

Defender of the Nation

06th January 2019 22:57:31 Hours

இராணுவ லொஜிஸ்டிக் தலைமையகத்தின் ஆண்டு நிறைவு விழா

கொஸ்கம சாலாவையில் அமைந்துள்ள இராணுவ லொஜிஸ்டிக் தலைமையகத்தின் 39 ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனவாரி 3 - 4 ஆம் திகதிகளில் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வை முன்னிட்டு வருகை தந்த இராணுவ லொஜிஸ்டிக் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சி.எஸ் அடிபொல அவர்களை இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் சமய அனுஷ்டான ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அனைத்து இராணுவத்தினரது பங்களிப்புடன் பகல் விருந்தோம்பலும் இடம்பெற்றது.

அன்றைய தினம் ஹங்வெல ‘சந்த செவன’ முதியோர் இல்லத்தில் வருடாந்த நிறைவு நிகழ்வை முன்னிட்டு அங்குள்ள முதியோர்களுக்கு பகல் உணவுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.Sports brands | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4