Header

Sri Lanka Army

Defender of the Nation

08th January 2019 15:32:39 Hours

வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற மாணவர்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் குருணாகல் வியாபாரியான திரு. சுரேஷ் ஸ்கந்தராஜா அவர்களது அனுசரனையில் இந்த பாடசாலை உபகரணங்கள் இந்த பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

வன்னேரிகுளம், கிரான்சி, உத்திரபுரம், சிவநகர் மற்றும் புதுமுறிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 112 மாணவர்களுக்கு இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இந்த பாடசாலை பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

திரு பியால் கெப்பெடிவலானா அவர்களது தொண்டு நிறுவனத்தின் மூலமாக பாடசாலை உபகரணங்களும் குருநாகல் வர்த்தகரான திரு. சுரேஷ் ஸ்கந்தராஜா அவர்களுக்கு இந்த மாணவர்களுக்கு நன்கொடை நிமித்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலை உபகரணங்கள் 300,000/= ரூபாய் பெறுமதி வாய்ந்ததாகும். 662 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முழுமையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தீப்தி ஜயதிலக அவர்கள் வருகை தந்து இந்த பாடசாலை மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

அத்துடன் குருணாகல் வியாபாரியான திரு சுரேஷ் அவர்களும் வருகை தந்து இந்த பாடசாலை உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர். jordan release date | Releases Nike Shoes