07th January 2019 11:33:58 Hours
இராணுவ பொறிமுறை காலாட் படையணிகளுக்கு இடையிலான குத்துச் சண்டை போட்டிகள் மூன்று நாட்கள் ஜனவாரி 5 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை தம்புள்ளையில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த போட்டிகளில் 3 ஆவது பொறிமுறை காலாட் படையணி சம்பியனாகவும், 4 ஆவது பொறிமுறை காலாட் படையணி இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.
சிறந்த குத்துச் சண்டை வீரனாக போர் வீரன் எச்.எம். ஐ சிரிவர்தனவும் இப்போட்டியில் போர் வீரன் டப்ள்யூ.ஏ.யூ தர்மசிறி கடும் தோல்வியை தழுவிக் கொண்டார்.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொறிமுறை காலாட் படையணியின் பிரதி கட்டளை அதிகாரி லெப்டினன்ட கேர்ணல் கே.கே.எஸ் பெரகும் அவர்கள் வருகை தந்து வெற்றீயீட்டிய வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை பரிசாக வழங்கி கௌரவித்து வைத்தார்.
குத்துச் சண்டை போட்டிகள் பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது. Best Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%