Header

Sri Lanka Army

Defender of the Nation

08th January 2019 13:12:10 Hours

பரனகமவெவ பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

வெலிஓயாவில் அமைந்துள்ள பரனகமவெவ பாடசாலைக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் ‘செனஹஷ அபி’ எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஜெயபஹலம் 'முனையம், இலங்கை துறைமுக அதிகாரசபையின் அனுசரனையில் 62 ஆவது படைப் பிரிவின் முழுமையான ஏற்பாட்டுடன் நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நன்கொடைகள் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் 621 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் (4) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்கள் 135 பேருக்கு பாடசாலை உபகரணங்களும், அத்துடன் பாடசாலைக்கு ஆய்வுகூட அலுமாரிகள், சங்கீத உபகரணங்கள், நூலக புத்தகங்கள் மற்றும் பாடசாலையில் பயண்படுத்தக்கூடிய பொருட்கள் இந்த நிகழ்வினூடாக நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசிங்க, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை நிர்வாகத்தினர் இணைந்திருந்தனர். best Running shoes | Autres