07th January 2019 16:29:35 Hours
இலங்கை இராணுவத்தின் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவத்தினரது ஏற்பாட்டில் அப்பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிப்புற்ற பொது மக்கள் 100 பேருக்கு மருத்துவ சிகிச்சைகள் (5) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.
57 ஆவது படைப் பிரிவின் கீழ் உள்ள 572 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் டீ.எம்.பி.பி தசநாயக அவர்களது பூரண தலைமையில் இந்த மருத்துவ சிகிச்சை முகாம் கல்வட்டிஹெடல் நாகேஷ்வர பாடசாலையில் இடம்பெற்றது.
இல. 56 புளியன்பொக்கானை கிராம சேவக பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் பொது மக்களுக்கு இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மருந்துவ சிகிச்சைகள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பந்துள ஹேரத், டொக்டர்களான ஞானதீபன், தனுஷ்க அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுஹேரா அவர்களது எண்ணக்கருவிற்கமைய 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. Sports News | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ