Header

Sri Lanka Army

Defender of the Nation

06th January 2019 08:00:52 Hours

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற பயிற்சி நிறைவு விழா

ஹேனானிகலையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு பயிற்சி நிலையத்தில் 543 இராணுவ பயிலுணர்கள் பயிற்சிகளை நிறைவு செல்லும் நிகழ்வு டிசம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கபில உதலுபொல அவர்கள் வருகை தந்தார். இவரை இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாரைகளுடன் வரவேற்கப்பட்டார்.

பயிற்சி இலக்கம் 23 மற்றும் 24 கீழ் இந்த இராணுவ பயிலுணர்கள் ஆறு மாத காலமாக இந்த பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்த பயிற்சிகள் பிரதான பயிற்சி தலைமை அதிகாரி மேஜர் யூ.எச்.டி.என் பெரேரா அவர்களது தலைமையில் , அணிவகுப்பு பயிற்றுவிப்பாளர் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் மற்றும் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மேலும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ பயிலுணர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கொண்டனர். Sports News | adidas garwen spezial white shoes - New In Shoes for Men