Header

Sri Lanka Army

Defender of the Nation

04th January 2019 11:58:58 Hours

இராணுவத்தினரால் இரு வீடுகள் நிர்மானித்து உரிமையாளர்களுக்கு கையளிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் ஹொரன தலாகல பௌத்த தியான மத்திய நிலையத்தின் சுமனரத்ன நாயக்க தேரர் அவர்கள் மற்றும் அவுஸ்திரேலியா ரொட் தம்பையா அவர்களின் அனுசரனையுடன் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரு வீடுகள் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

யாழ் கட்குளம் மற்றும் அல்வை பிரதேசங்களில் இந்த வீடுகள் இராணுவத்தினரால் நிர்மானித்து உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த வீடு கையளிப்பு நிகழ்வின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாரச்சி, வடமராச்சி பிரதேச செயலகத்தின் செயலாளர் ஆள்வாய் பிள்ளை, அப்பிரதேச கிராமசேவையாளர்கள், 55ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயந்த குணரத்ன, 551 ஆவது படைத் தளபதி, 16 ஆவது இலேசாயுத காலாட் படையணி,, 4 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

2019 ஆம் ஆண்டு புது வருடம் பிறந்து முதற் கிழமை இந்த வீடுகள் இராணுவத்தினரால் பொது மக்களுக்கு கையளிக்கப்பட்டன. jordan release date | Women's Designer Sneakers - Luxury Shopping